ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடி மாதத்தில் 18ஆம் தேதி பலர் விவசாயத்தை தொடங்குவார்கள். இந்த நாளில் ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கு பலர் கொண்டாடுவார்கள். ஆறுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வித விதமான பலகாரம் சமைத்து வீட்டு வாசலை அலங்கரித்து காவிரி வைகை தாமிரபரணியை மனதால் வணங்கி கொண்டாடுவார்கள்.
ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாளைய தேதியில் துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது. நாளை வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.