ஆடி மாதம் என்றாலே திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா உள்பட எந்த விசேஷமும் செய்வதில்லை என்பது அறிந்ததே. அது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மேலும் ஆடி அழைக்கும், தை துரத்தும் என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. அதாவது ஆடி என்பது குடும்பம் முன்னோர்களை அழைக்கக் கூடிய ஒரு மாதமாகவும் தை மாதம் குடும்ப முன்னோர்களை வழி அனுப்பி வைக்கும் காலமாகவும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.