கடனை அடைக்க வேண்டுமா? இந்த கணேச மந்திரத்தை சொல்லுங்கள்..!

Mahendran

வெள்ளி, 26 ஜூலை 2024 (19:43 IST)
உலகில் கடன் வாங்காதவர்கள் மிகவும் குறைவு என்பதும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலர் தத்தளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. 
 
கடனை அடைக்க முடியாமல் சிலர் விபரீத முடிவை எடுத்து வருவதும் செய்திகளை ஆங்காங்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் கடனை அடைக்க வேண்டும் என்றால் கணேச மந்திரத்தை கூறினால் போதும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
 
"ஓம் கணேசாய ருணம் 
சிந்தி வரேண்யம் ஹ§ம் நம்; 
பட்ஸ்வாஹா" 
"ஓம் க்லௌம் க்ரோம் கணேசாய ருணம் சிந்தி 
வரேண்யம் ஹ§ம் நம், பட் ஸ்வாஹா"
 
 இந்த மந்திரத்தை கூறிக்கொண்டு கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்திக் கொண்டால் தானாக கடன் அடையும் வழிகள் கிடைக்கும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
சனிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை கூறி கடன் கொடுக்க வேண்டிய தொகையிலிருந்து ஒரு சிறு அளவை கொடுக்க ஆரம்பித்தால் அந்த கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீரும் அளவுக்கு நமக்கு செல்வம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
அதே போல் விநாயகருக்கு தவறாமல் அருகம்புல் மாலையை அணிந்து வந்தால் கடனை திருப்பிக் கொடுக்கும் திறன் கிடைக்கும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்