சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க உதவும் தக்காளி ஃபேஸ்பேக்!

சரும செல்களுக்கு தேவைப்படும் கனிமச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் ஏராளமாக உள்ளது. இவற்றை தினமும் முகத்தில் பேக்காக போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், சரும கருமை என்று பல வகையான  பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்குகிறது.
* தக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து,  முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம்  நன்கு ஊற வையுங்கள். 15 நிமிடம் ஆனதும், நீரால் கழுவுங்கள். இப்படி ஒருமுறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் சருமத்தில்  காணலாம்.
 
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* தக்காளியை நன்கு அரைத்து, அத்துடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின்  மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால்  கழுவி துணியால் உலர்த்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்