தேவையான அளவு நீரை நன்கு கொதிக்கவைத்து அதில் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு மருதாணி இலையை அரைத்து இந்த நீரில் சேர்த்து குளிரவைக்கவும். சில மணி நேரம் இந்த கலவை நன்கு ஊற வேண்டும். பின்பு இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் களைத்து முடியை அலசவும்.
வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.