எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட, எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
பின்பு அந்த பொடியுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் பொலிவுடன் காணப்படும். குறிப்பாக சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் கருமைகளும் மறைந்துவிடும்.
நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.