இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு அரைத்து, முடியிலும் தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து முப்பது நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.
பின்னர் முப்பது நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முடியும் தொடர்ந்து , கருமையாக வளரும்.
ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நன்கு அரைத்து, தயிரில் கலந்து தலையில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு தலையை நன்கு அலச வேண்டும். இதில் உள்ள வேப்பிலை தயிர் இரண்டுமே பொடுகை போக்கும் வல்லமை கொண்டது.
சின்ன வெங்காயச் சாற்றை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் பொடுகு போய்விடும். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். சின்ன வெங்காயத்தில் கந்தகம் உள்ளதால் பொடுகையும் நீக்கி புது முடிகளையும் முளைக்க வைக்கும் தன்மை உடையது.
எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து முடியை நீரில் நன்கு அலச வேண்டும்.