அவகேடா எண்ணெய்யில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் நோய்களை சரி செய்கிறது. புற்று நோய் வருவதை தடுக்கிறது, காயங்களை ஆற்றுகிறது, புதிய செல்கள் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
இந்த எண்ணெய் பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி ஜீரண சக்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இதை சமையலில் மற்றும் சாலட் போன்றவற்றில் வெஜ்ஜூஸ் மற்றும் வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம்.
அவகேடா எண்ணெய்யில் அதிகளவு பீட்டா சைடோஸ்டெரோல் உள்ளது. இவற்றில் அதிக அளவு உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இயற்கையாகவே இரத்த குழாய் தமனிகளின் சுவரை பாதுகாக்கிறது. மேலும் இரத்த குழாய்களில் தங்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி இதய நோய்கள் வராமல் காக்கிறது. அதே நேரத்தில் நமது இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.