முகத்தின் அழகை அதிகரிக்க செய்யும் இயற்கை ஃபேஸ் மாஸ்க்குகள் !!

முட்டை ஃபேஷியல்: உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி மாஸ்க் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்  போடுங்கள்.

எலுமிச்சை ஃபேஷியல்: எலுமிச்சை மிகவும் சிறப்பான ஒரு ப்ளீச்சிங் தன்மை நிறைந்த பொருள். எனவே எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து உடனே கழுவிவிட்டு, மென்மையான துணியால் முகத்தை துடைத்து, பின் ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால்  சருமமானது மென்மையாக இருக்கும்.
 
தயிர்: சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கவும், சருமத் துளைகளை அடைக்கவும் தினமும் தயிரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 20 நிமிடம்  ஊறவைத்து பின் கழுவ வேண்டும்.
 
ஓட்ஸ்: சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு ஓட்ஸ் தான் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும்.
 
பால்: தினமும் பாலைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி முகம் பொலிவோடும், மென்மையாகவும்  இருக்கும்.
 
வாழைப்பழம்: வாழைப்பழம் கூட அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களில் ஒன்று. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதனைக் கொண்டு முகத்தை லேசாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாம் சருமம் வறட்சியடைவதைத் தடுப்பதோடு, சரும சுருக்கம் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்