முடி கொட்டுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம் !!
செவ்வாய், 31 மே 2022 (15:27 IST)
முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
வாகனத்தின் அதிகரிப்பு உட்படப் பல்வேறு காரணங்களால் இன்று நம் நாட்டில் அதிக அளவு மாசு நிலவுகிறது. இந்த மாசு அல்லது அழுக்கு முடியில் படும்பொழுது முடி வளர்ச்சி பெரிய அளவில் பாதிப்பு அடையும். மேலும் முடி வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விழத் தொடங்கும்.
முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.
முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும். உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.
தேங்காய் எண்ணெய் எடுத்து மிதமான அளவு சூடுபடுத்தி ஸ்கால்ப்பில் விரல்களைக் கொண்டு சுழற்சி முறையில் தேய்க்கவும். இதனை இரவு முழுதும் அப்படியே வைத்து அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளிக்க வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவ்வாறு செய்வதால் சில மாதங்களிலேயே அடர்த்தியான கூந்தலைப் பெற முடியும்.
சின்ன வெங்காயங்களை உரித்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து தலைமுடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது.
இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு, பேன், தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.