குளிர்காலத்தில் கிளிசரின் கொண்டு சரும பராமரிப்பு...!
க்ளிசரினை முகத்திற்கும், உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது.
க்ளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதால் முகம் மிருதுவாக மாறி, கடுமையான வெயில் காலங்களிலும், நடுங்கும் குளிர் காலங்களிலும் இது நல்ல பலனைத் தருகிறது.
சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம். மேலும் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.
கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்தில் உண்டாகும் நீர் இழப்பை குறைத்து சருமத்தை நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது.
சருமத்தில் ஈரப்பதத்தால் ஆன ஒரு அடுக்கை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் போன்றவற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், நீர்ச்சத்தோடும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் நீங்கள் கிளிசரின் பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.
இயற்கையாக குணப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ள கிளிசரின் ஒரு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, எக்சிமா, சோரியாசிஸ் போன்ற சரும நிலைகளுக்கு சிறந்த தீர்வைத் தருவது கிளிசரின்.
சரும அணுக்களில் உள்ள புரதங்களை உடைத்து அவற்றை சருமத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது கிளிசரின். இதனால் புதிய சரும அணுக்கள் உற்பத்தி அதிகரித்து, தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் திரும்பக் கிடைக்கிறது.
2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் கிளிசரின், 2 ஸ்பூன் ஓட்ஸ் ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எல்லா, மூலப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடர்த்தியான பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் கைகளில் தடவி நன்றாக காய விடவும். நன்றாகக் காய்ந்தவுடன், பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக ஸ்கரப் செய்து பின்பு கழுவவும்.