வெள்ளரிச்சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம். மேலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்கலின் கருவளையத்தைப் போக்கும்.
தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின்மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம்.
பப்பாளியின் சதைப் பகுதியை பாலாடையுடன் சேர்த்து மசித்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.