சேதமடைந்த சருமத்தை சீர்படுத்த உதவும் தேன்...!!

தேன் பல நோய்களை சரி செய்யும் வல்லமை பெற்றது மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

வைட்டமின்கள் பி1, பி2, பி3, சி, பி6 ஆகியவை தேனில் அடங்கியுள்ள சத்துக்களாகும். இவை அனைத்தும் நமக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் ஆகும். இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றல் அளித்து தசைகளை வலுவாக்குகின்றன
 
சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்து பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. தேன் உடல் சருமத்திற்கு ஒரு நல்ல மருந்து ஆகும். ஏனெனில் இதன் மருத்துவ  குணம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் மற்றும் சருமத்தை பொலிவாக்கி, மிருதுவாக்கி அதன் தன்மையை தக்க வைக்கிறது.
 
சரும சுருக்கம் தற்போது சிறியவர்களுக்கு கூட வருகிறது. சரும சுருக்கம் ஏற்பட்டால் அது நம்மை வயதான தோற்றம் கொண்டது போல மாற்றிவிடும். இவ்வாறு  சுருக்கம் ஏற்படாமல் இருக்க தேனை உபயோகப்படுத்தலாம். இதில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உயிர் பெறச்செய்து சருமத்தை  ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
 
தேன் சேதமடைந்த சருமத்தை சீர்படுத்துகிறது மற்றும் சரும அழற்சி, தோல் பிரச்சனைகளை சரி செய்யும். சொரியாசிஸ், சிரங்கு, படை போன்றவை தேனில்  உள்ள பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் மூலம் சரி செய்யப்படுகின்றன.
 
தேன் சருமத்தின் உள்ள அழுக்கு மற்றும் தூசுகளை நீக்கி முகப்பரு வராமல் தடுக்கிறது. மேலும் தேன் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உதடுகள் பட்டு போல மிருதுவாக இருக்க தேன் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்