முடி வளரத் தேவையான சத்துக்கள் விட்டமின் ஏ, சி, ஈ, பி5, பி6, பி12 மற்றும் இரும்பு சத்து, ஜிங்க், புரோட்டின், அமினோ அமிலங்கள் ஆகியவை முடி வளரத் தேவையான சத்துக்களாகும்.
பீன்ஸில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. அதோடு விட்டமின் பி, சி,கனிமங்களையும் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் அனைத்துமே மிக நல்லது. கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ் ஆகியவைகள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.
பருப்புவகைகளில் அதிக அளவு புரோட்டின்,விட்டமின், மினரல் உள்ளன.இவைகளை தினமும் உண்டால் டல்லடிக்கிற கூந்தல் பிரகாசிக்கும். பாதாம், பீ நட்ஸ், வால் நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறவைத்த பாதாம் மிகவும் நல்லதாகும்.