இயற்கையான முறையில் வீட்டில் செய்யும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்!

பெண்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக்  கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த `க்ரீம்'களால் `அலர்ஜி'யும் ஏற்படுகிறது. எனவே, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்க்கலாம்.


 
 
அழகான பாதத்திற்கு தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு,  எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம்  செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய  டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
 
கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த  பிரச்சினைதான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து போடுவது பயன் தரும்.
 
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 
 
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்