தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.
பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.