நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம், இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்கவைக்கவும்.
செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதனை தேவையான அளவு எடுத்து, சம அளவு மருதாணிபொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.