சரும பராமரிப்பு குறிப்புகள்

செவ்வாய், 17 ஜூலை 2012 (14:04 IST)
மழைக் காலத்தில் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதால் நமது சருமம் விரைவில் றண்டு இயற்கையான பொலிவை இழந்து விடுகிறது. ஆனா‌ல், இயற்கையான அழகைத் தக்கவைப்பது இப்போது மிகவும் சுலபமானதுதா‌ன். சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், தவறாமல் க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்தால் போதும்.

இவை மூன்றையும் செய்வதற்கு நேரமில்லாதவர்கள் க்ளென்சிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் உடன் வாரம் ஒரு நாள் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். ஸ்க்ரப்பிங் செய்வது நமது சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்கி சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கும்.

மேலு‌ம் சருமத்தைப் பராமரிப்பதற்கான அழகுக் குறிப்புகளில் சில:

தினமும் மிதமான தண்ணீரில் குளிப்பது சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

உதட்டில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க பாலேடு அல்லது உப்பில்லாத வெண்ணெயைத் தடவி வரலாம்.

ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து, பழைய டூத்பிரஷ் உபயோகித்து உதட்டில் தேய்த்தால், உதட்டில் டெட் செல்கள் நீங்கி, வழவழப்பாகும். இது ஒரு சிறந்த லிப் ஸ்க்ரப் ஆகும்.

பாத்திரம் கழுவியவுடன், நகங்களில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் தடவினால், நகங்கள் உடைவதைத் தவிர்க்கலாம்.

வெளியே சென்று வீடு திரும்பியவுடன், கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு, பின்னர் மாய்ஸ்சரைசரைத் தடவ வேண்டும். கால்கள் புதுப்பொலிவு பெறும்.

குளித்தபின், சிறிதளவு க்ளிசரினுடன் பன்னீரைக் கலந்து கைகளில் தேய்த்தால், நாள் முழுவதும் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்