உடல் எடையைக் குறைப்பதில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்!

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சிக்குதான் முதல் இடம், உடற்பயிற்சி செய்யும்போது எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல் புரிதலோடும், அக்கறையோடும் செய்தால்தான், அதன் பலன் முழுமையாகக் கிட்டும். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு உடற்பயிற்சிகள் உதவியாக இருக்கும்.


 
 
இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.
 
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகின்றது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது. உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
 
பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம்அப் பயிற்சிகளையும், பயிற்சி செய்த பின்பு கூல்டவுன், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் செய்யவேண்டும். இல்லை எனில், கை கால் தசைகளில் வலி, மூட்டுகளில் இறுக்கம், சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ப, பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்தால், நல்ல ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறமுடியும். கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்க இந்த பயிற்சி எதிர்பார்த்த பலனை தரும். 

இந்த பயிற்சியை செய்ய விரிப்பில் கால்களை நீட்டிப் படுத்துகொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் நீட்டி விரிப்பில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். கால்களை நீட்டி நேராக மல்லாந்து படுத்துகொண்டு, கால்களை மடக்கி, தொடைப்பகுதி வயிற்றின் மீது மெள்ள அழுந்துமாறு வைத்து, பிறகு மீண்டும் கால்களை நமக்கு நோக்கி நீட்ட வேண்டும். இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்