நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உண்ணாவிரதம்!

திங்கள், 7 மே 2018 (18:09 IST)
உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்காவும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்குவகிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் ஸ்டெம்செல்கள் திறம்பட செயல்படுவதில்லை. 
 
இதனால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். உண்ணாவிரதம் இல்லாத எலிகளின் உடலில் உள்ள ஸ்டெம்செல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
 
உண்ணாவிரதம் இருந்த எலிகளின் உடலில் இருக்கும் ஸ்டெம்செல்களில் கொழுப்பு அமிலமங்கள் கரைந்து புத்துணர்ச்சி பெறுவது தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்