ரெட் ஒயின் ஆபத்தானதா?

புதன், 17 பிப்ரவரி 2021 (16:02 IST)
ஒயின்களில் ரெட் ஒயின், ஒயிட் ஒயின் என்று இரண்டு வகை உள்ளது. ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும், ஒயிட் ஒயின் வெள்ளை திராட்சைகளிலும் செய்யப்படுகிறது.


 
ஒயிட் ஒயின் இதயத்திற்கு நல்லது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இதய நோய்களைத் தடுக்கிறது.
 
ரெட் ஒயினில் பாலிபினால்கள் இருக்கிறது. அதனால் ஒரு நாளுக்கு மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடித்து வந்தால், வயதாவதை இது  தடுக்கிறது.
 
ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால் புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற தாக்கத்தை தடுக்கலாம். ரெட் ஒயினில் மெலடோனின் என்னும்  தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. 
 
ரெட் ஒயினில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் ரத்தக்கட்டைத் தடுக்கும். மேலும் ரெட் ஒயின் ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது.
 
பற்கள் மற்றும் அதை சுற்றியுள்ள ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 2 முறை பல்துலக்குதல் நல்லது. ரெட் ஒயினும்  குடிப்பது நல்லது.
 
ரெட் ஒயின் குடிப்பதால், வாழ்நாள் அதிகமாகும். மேலும் இது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே இதனை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் ஏற்படும் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
 
ஆகவே ஒயிட் ஒயினை விட ரெட் ஒயின் உடலுக்கு ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டிலும் மது இருப்பதால் அளவோடு சாப்பிட்டால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்