சிக்கன், மட்டன் பிரியர்களா நீங்கள்; உங்களுக்கு ஒரு பகீர் செய்தி

சனி, 8 ஏப்ரல் 2017 (18:52 IST)
இறைச்சி பிரியர்கள் தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் சாப்பிடுவது இல்லை. தற்போது மாறிவரும் வாழ்க்கை சூழலில் இறைச்சி உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதை தவிர்விப்பது நல்லது.


 


 
இறைச்சி உணவுகளை தினசரி எடுத்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனை குறித்து பார்ப்போம்.
 
இறைச்சி உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படியும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். 
 
அதிலும் குறிப்பாக பிராய்லர் சிக்கன் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். உணவில் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், இறைச்சி உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் வரை ஆகும்.
 
கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. உடலுக்கு அதிக அளவில் வேலை கொடுக்காமல் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் தினசரி இறைச்சி உனவுகளை எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்