கட்டுப்படுத்தும் முறைகள்:
நிலத்தை ஆழ உழுவதால் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. காய்த்துளைப்பான் எதிர்ப்புத் திறனுள்ள ரூபாலி, ரோமன், பூசா ரெட்பிளம் போன்ற இரகங்களைப் பயிரிட வேண்டும். தாக்கப்பட்ட காய்களையும், பழங்களையும், புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். பொருளாதார சேத நிலையைப் பொருத்து பூ பூக்கும் பருவத்தில் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50,000 என்ற அளவில் இடவேண்டும். கிரைசோபா இறை விழுங்கிப் பூச்சியை 50,000 முட்டைகள் அல்லது 10,000 புழுக்கள் என்ற அளவில் விடவேண்டும்.