எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும் என்பதை அறிந்து கொள்வோம்....
பச்சரிசி அதிகமானால் - சோகை நோய். அச்சுவெல்லம் அதிகமானால் - அஜீரணம். பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி.
இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.
பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.
மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.
பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்.
எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்.
மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
மிளகாய் அதிகமானால் - வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.
எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.
உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.
வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.
குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதனை உணர்ந்து உணவின் அளவு இருத்தல் அவசியமாகும்.
By. Dr. Purushothaman - பகிர்ந்தவருக்கு நன்றி