கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம் எப்படி?

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம்.

கழுத்து வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்கு வரும்வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது, முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
இதயத்திலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்கிற நரம்புகள்  கழுத்துப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
 
கழுத்து வலிக்கான காரணம்:
 
கம்ப்யூட்டரை சரியான உயரத்தில் வைத்து உபயோகிப்பது, எப்போதும் லேப்டாப் முன்பு அமர்ந்திருப்பது, படுத்துக்கொண்டு கம்ப்யூட்டரை உபயோகிப்பது. இதனால் கழுத்தின் பக்கத்திலுள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள  சவ்வில் அழுத்தம் அதிகமாகும். இதனால் ‘செர்வைகல் டிஸ்க்’என்ற சவ்வு விலகி, கழுத்து வலி கைகளுக்கும், கால்களுக்கும்  பரவலாம்.
 
முதுமையின் காரணமாக தேய்மானம் ஏற்படும்போது, அது பக்கத்துல உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) மற்றும்  நரம்புகளில் அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். நரம்புகளும் வரும் வழி மெலிந்து, கை, கால்கள்  சோர்வுற்று, அந்தப் பகுதிகளில் உணர்ச்சிகளும் குறையும்.
 
தண்டுவடம் பாதிக்கப்படுவதால் கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்களிலும் உணர்ச்சி குறையலாம். இன்னும் தீவிரமானால், சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை வரலாம். கழுத்து வலி வரும்போது, அது சாதாரண வலியாக இருந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்