* அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
உளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக்குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம். மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் தரக்கூடும்.
சிகிச்சை மூலம், நோய் அறிகுறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.