தினமும் ஒரு ஷாட் டக்கிலா...

புதன், 27 ஜூன் 2018 (13:57 IST)
டக்கிலா நிச்சயமாக ஒரு ஆரோக்கிய உணவு இல்லை என்றாலும், அது உண்மையில் பல ஆச்சரியமான உடல் நலன்களை கொண்டுள்ளது. தினமும் ஒரு ஷாட் டக்கிலா குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
# பொதுவாக எடை இழக்க விரும்பினால் ஆல்கஹால் குடிக்க வேண்டாம் என்று கூறுவர். ஆனால், அளவுடன் டக்கிலாவை குடிப்பவராக இருந்தால் உடல் எடையை குறைக்க இது உதவும். 
 
# சாப்பிட்ட பிறகு டக்கிலா ஒரு ஷாட் எடுத்துக்கொண்டால் செரிமானத்திற்கு உதவும். பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இதனை பரிந்துரைக்கிறார்கள். 
 
# இவை கால்சியம் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், எலும்புகள் மற்றும் பற்கள் பாதுகாப்பிற்கு உதவுகிறது. 
 
# டக்கிலா கெட்ட கொழுப்புக்களை அழித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்க உதவுகிரது. இதனால் இருதய நோய்களுக்கான பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. 
 
# இது டைப் 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு பின்னர் இதனை தினமும் அருந்தலாம். 
 
# பெருங்குடல் அழற்சி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு டக்கிலா மருந்தாக கருதப்படுகிறது. அதாவது இதில் உள்ள கெமிக்கல் பொருள் மூலம் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட உள்ளதாம். 
 
# டக்கிலா நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. இவை தூக்கமின்மையையும் போக்க கூடிய ஒன்று. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்