இளமை திரும்புதே... பாட்டுக்கேத்த பழம்தான் இது...

ஞாயிறு, 5 மே 2019 (15:58 IST)
கிவி பழம் பல நன்மைகளை நம் உடலுக்கு தரக்கூடிய பழமாக உள்ளது. அப்படி என்னென்ன நன்மைகளை தருகிறது என பார்ப்போம்.. 
 
1. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது. 
 
2. கிவியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
 
3. அதேபோல் இதய தமணிகளில் ரத்த கட்டி உருவாகாமல் தடுக்கும்.
 
4. கிவி பழத்தில் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகளும் இதை உண்ணலாம்.
 
5. கிவி பழத்தில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடையை குறைக்க இதை உண்ணலாம். 
 
6. கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை இளமை பொலிவுடன் வைத்திருக்கும். 
 
7. பெண்கள் மிகவும் எளிதாக கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. 
 
8. கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். ஆஸ்துமா நோயாளிக்கு இது மிகவும் சிறந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்