புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளில் இருந்து தப்பிக்க உதவும் காளான்...

சனி, 28 அக்டோபர் 2017 (13:40 IST)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு காளான். இது தன்னுள் பல ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளை கொண்டுள்ளது. 


 
 
# 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மிகி உள்ளது. சோடியம் 9 மிகி உள்ளது. எனவே இதயத்தை காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
 
# காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 
 
# காளான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது.
 
# காளானில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
 
# காளான் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.
 
# பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
 
# தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயை குணப்படுத்த முடியும்.
 
# காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
 
# காளானை தொடர்ந்து சமைத்து உண்டுவந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்