பேரீச்சம் பழத்தை உண்பதால், இரும்பு சத்து கிடைக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இது உள்ளது. அவை என்னவென்பதை காண்போம்...
# பேரீச்சம் பழத்தில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.
# பேரீச்சம் பழம், ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும். மேலும், ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை கொண்டது.
# இதில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.