கண்கள் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி, கண்களில் நீர் வடிதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள். எந்த ஒரு பொருளையும் நீண்ட நேரமாக உற்றுப் பார்ப்பது, தூய்மையற்ற சூழலில் இருப்பது, மாசுக்கள் இருக்கும் பகுதிகள் நீண்ட நேரம் கண்களை திறந்து வைத்திருப்பது ஆகியவை காரணமாக உலர் கண் நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.