லெமன் டீ சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்.
முகப்பருக்கள்: டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும். முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச் செய்யும்.
எண்ணெய் சருமம்: எண்ணெய் சருமம் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். காலை மாலை என இரு வேளையும் லெமன் டீயினால் முகம் கழுவினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம்.
பற்கள் வெள்ளையாக்க: உங்கள் பற்களில் விடாப்படியான மஞ்சள் கறை இருந்தால், லெமன் டீயினை முயற்சித்துப் பாருங்கள். பல் விளக்கியதும், வாயில் சிறிது லெமன் டீயினை வைத்துக் கொண்டு, ஒரு நிமிடம் கொப்பளியுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், எப்படிப்பட்ட மஞ்சள் கறையும் போய் விடும்.