எளிய முறையில் இயற்கையான வழியில் வீட்டிலேயே தலைமுடி வளர, முடி உதிர்வு, முடி பிளவை கட்டுப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான கூந்தல் பிரச்சனை இருந்து விடுபட எண்ணெய் தயாரிக்கலாம்.
தெவையான பொருட்கள்: கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய். கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது தலைமுடியை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, இறந்த மயிர்கால்களை நீக்கி புத்துயிர் கொடுக்கிறது. அதில் உள்ள நிறைய அமினோ அமிலங்கள் நமது முடிக் கால்களை வலுவாக்குகிறது. கூந்தல் உடைந்து போவதை தடுத்து ஆரோக்கியமான பளபளக்கும் கூந்தலை தருகிறது.
தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்தது.இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தேய்க்கும் போது அதிலுள்ள விட்டமின் பி6 கூந்தலை வலிமையாக்குகிறது, கூந்தல் உதிர்தல், கூந்தல் பிளவு போன்றவற்றை தடுக்கிறது.
செய்முறை: ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் வைக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு குளிர்விக்கவும். இப்பொழுது இதை வடிகட்டி ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்.