கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌ம் வே‌ண்டா‌ம்!

வியாழன், 28 நவம்பர் 2013 (17:02 IST)
கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (Cancer) என்று தான் எந்த ஒரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம். கர்ப்பப் பையில் வருகின்ற கட்டிகள் புற்றுநோய் கட்டியாக வளரலாம்.

ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் கர்ப்பப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கர்ப்பப் பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.
FILE

இது அரிதாக ஏற்படுகின்ற நோயும் இல்லை. இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம்.

ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இது புற்று நோயும் அல்ல. மேலும் இந்த கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவு. யாருக்காவது பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பொதுவாக 40 முதல் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இதற்கான அறிகுறிகள்:

• மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
• அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு
• அடிவயிறு வீங்குதல்
• அதிகம் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்

இது குழந்தை இன்மைக்கு காரணமாகின்றது. சில கட்டிகள் கர்ப்ப‌ப் பையின் சுவற்றின் உட்புறமாக அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற இடத்திலே இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.

ஆனால் இவ்வாறு ஏற்படுகின்ற சந்தர்ப்பம் குறைவு. மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களு‌க்கு‌ம் இது ஏற்படுவதில்லை. (மிகவும் அரிதாக ஏற்படும்). மற்றும் கருப்பையின் உள்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
FILE

சில வேளைகளில் இந்தக் கட்டி ஏற்பட்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.

இவ்வகை கட்டிகள் இருப்பதை ஸ்கேனிங் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இதற்காள தீர்வு என்று பார்க்கும் பொழுது சிசேரியன் மூலம் அகற்றிவிடலாம்.

இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாத பெண்களுக்கு அகற்றப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதிகம் ரத்த‌ப் போ‌க்கு போன்ற பிரச்சனை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.

இது இரண்டு விதமாக அகற்றப்படலாம். ஒன்று கர்ப்பப் பையோடு சேர்த்து அகற்றுதல். மற்றது கட்டி மற்றும் அகற்றுப்படுதல். குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களு‌க்கு கர்ப்பப் பை அக‌ற்ற‌ப்படாம‌ல் கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!

வெப்துனியாவைப் படிக்கவும்