உங்க டூத்பேஸ்ட்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

செவ்வாய், 17 செப்டம்பர் 2013 (13:06 IST)
FILE
“உங்க டூத் பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா?” ன்னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம்

“உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?” ன்னு அனுஷ்கா கேட்டாங்க, அதனால அதையும் வாங்கினேன். சரி மேட்டருக்கு வருவோம்.

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா...? இது இருக்கானு கேட்டாங்களே.........ஆனா அதுல நிக்கோடின் இருக்கும்ன்னு யாருமே சொல்லல.

என்னது நிக்கோடினா.............?

அடப்பாவிகளா.........

எங்கள நிம்மதியா பல்லு கூட வெளக்க விடமாட்டீங்களா...?DISPAR ( Delhi Institute of Pharamedical Science & Reserach) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுப்பிடிச்சி இருக்காங்க. நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும்.

Colgate, Vicco, Dabur, Himalaya இது போன்று 24 கம்பெனியின் பேஸ்ட்டை சோதனை செய்ததில், அதில் 7 கம்பெனியின் பேஸ்ட்டில் நிக்கோடின் கலந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஓரு சிகரெட்டிலயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா இது போன்ற கம்பெனியின் பேஸ்ட்டில் 18mo/gm நிக்கோடின் இருக்காம் .

அதாவது ஒருதடவை (பிரஷ் செய்வது) பல் துலக்கினால் 9 சிகரெட் குடிப்பதற்கு சமமாகிறது. DISPAR ( Delhi Institute of Pharamedical Science & Reserach) இதனை 2011ம் ஆண்டிலேயே ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.

ஆனால் இதன் ஆராய்ச்சி முடிவை Govt.. மற்றும் பத்திரிக்கைத் துறையில் வெளிவராமல் மூடி மறைத்து விட்டது. பணத்துக்காக மக்களுக்கு சாராயம் விற்கும் பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா! இங்கு நியாயமாவது தர்மமாவது!

நன்றி: டாக்டர். சி.இரா. தமிழ்வாணன்; ஆசிரியர்- பசுமை இந்தியா

வெப்துனியாவைப் படிக்கவும்