எந்தெந்த உணவு சாப்பிட்டால் பால் சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா?

புதன், 29 மார்ச் 2017 (06:50 IST)
பால் என்பது மனிதனுக்கான முக்கிய உணவுகளில் ஒன்று. பாலில் இருந்து கிடைக்கும் தயிர், நெய் ஆகியவையும் உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்கள். பாலினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாலும் பாலுடன் ஒருசில உணவுகள் கலந்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு கலந்தால் விஷத்தன்மையாக மாறிவிடும் அபாயமும் உள்ளது.


 


இரவில் பால் குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். ஆனால் இரவில் ஒருசில குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொண்டால் அன்றையை தினம் பால் குடிக்க கூடாது.

எந்தெந்த உணவுகளை சாப்பிடும்போது பால் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.

1. பால் சாப்பிடும்போது அதனுடன் பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், தயிர், முட்டை, கொள்ளு, பருப்ப வகைகள் ஆகியவற்றை சேர்த்து உண்ணக்கூடாது. அவ்வாறு சாப்பிடும் போது, ஜீரண செயலில் ஈடுபட்டிருக்கக்கூடிய என்சைம்களின் செயலைத் தடுத்து, உடலில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

2. பாலுடன் முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் ஆகியவற்றால் ஆன உணவுகளுக்குப் பின், பாலை குடிக்கவே கூடாது.

3. பால், தயிர் ஆகியவற்றோடு பழங்களைச் சேர்த்து சாப்பிடவே கூடாது. பழங்கள் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவற்றை பிற எந்த உணவுகளோடும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது நம்முடைய ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும். உடலில் கபம், பித்தம் பான்றவற்றை உண்டாக்கிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்