உடலின் மிக முக்கியமான பாகங்களில் சிறுநீரகங்களும் ஒன்று. உடலில் வயிற்றின் அடிப்பகுதியில் அவரை விதை வடிவத்தில், சிறிதாக இருப்பதுதான் சிறுநீரகம. இதனை ஆங்கிலத்தில் கிட்னி என்கிறோம்.
இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு மனித சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது. சிறுநீரகத்தின் செயல்களை எண்ணிப் பார்த்தோமானால் நமக்கு இறைவனின் மீது நிச்சயம் ஒரு மதிப்பு வரும். அந்த அளவிற்கு சிறுநீரகத்தின் பணி அமைந்துள்ளது. உடலில் பல்வேறு நடவடிக்கைகளை கவனிக்கிறது இந்த சிறுநீரகங்கள். பொதுவாக ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஆனால் ஒரு மனிதன் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானதாகக் கருதப்படுகிறது.