கருவை பா‌தி‌க்கு‌ம் ப‌ணி‌யிட‌ங்க‌ள்

புதன், 21 நவம்பர் 2012 (18:42 IST)
FILE
சில தொ‌ழி‌ற்சாலைக‌ள் அ‌ல்லது தொ‌ழி‌ற் கூட‌ங்க‌ள், கருவை பா‌தி‌க்க‌க் கூடிய அபாய‌‌த்தை ஏ‌ற்படு‌த்தலா‌ம். அதாவது பணியிடங்களிலுள்ள சில சூழல்களும் வளரும் கருவைப் பாதிக்கின்றன.

குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;

இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளு‌ம் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.

எனவே, இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌‌ண்க‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம் உடனடியாக த‌ங்களது ப‌ணி‌ச் சூழலை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது அவ‌சியமா‌கிறது.

கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.

ப‌ணி‌யை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள இயலாது எ‌ன்றா‌ல், ‌பிரசவ கால‌ம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலா‌ம். எ‌ந்த வகை‌யிலு‌ம், ஆப‌த்தான ப‌ணி‌ச் சூழ‌லி‌ல் கரு‌த்த‌ரி‌த்த‌ ‌பிறகு வேலை செ‌ய்வதை தொடர வே‌ண்டா‌ம். அது உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களது கரு‌வி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

மேலு‌ம், எ‌க்‌ஸ்-ரே எடு‌க்கு‌ம் வேலையையு‌ம், எ‌க்‌ஸ்ரே அறை‌க்கு‌ள் அடி‌க்கடி செ‌ன்று வருவதையு‌ம் கருவு‌ற்ற‌ப் பெ‌ண்க‌ள் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். கருவு‌ற்ற சமய‌த்‌தி‌ல் ஏதேனு‌ம் உட‌ல் உபாதை‌க்காக எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டி வ‌ந்தா‌ல், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பான முறை‌யி‌ல் மறை‌த்து‌வி‌ட்டு ‌பிறகுதா‌ன் எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டு‌ம்.

கருவு‌ற்ற பெ‌ண்க‌ள் பலவ‌ற்றையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ப‌ணியா‌ற்ற வே‌ண்டு‌ம்.

சாப்ட்வேர்துறை ஊழியர்களுக்கு பெருமளவில் குழந்தைப் பேறு பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்