குஜராத்தில் பாஜகவை திணறடிக்கும் தனிஒருவன் ஜிக்னேஷ்

திங்கள், 18 டிசம்பர் 2017 (11:51 IST)
குஜராத் வாட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி பாஜக வேட்பாளரை விட 10,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

 
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின.
 
இன்று வாக்க்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரை பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாஜக தலைவர், குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் குஜராத் வாட்காம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் தற்போது 37,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 26,000 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
 
ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூன்று பேரும் குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிக்னேஷ் மேவானி குஜராத்தின் தலித் மக்களின் குரலாகவும் பார்க்கப்படுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்