ஜோக் : நட்புக்கு சாவில்லை

Webdunia

சனி, 4 ஆகஸ்ட் 2007 (16:39 IST)
பேரழிவு
எனக்கு இயற்கை பேரழிவுகளின் புகைப்படங்களை சேமிப்பது பிடிக்கும்...
உன்னுடைய புகைப்படத்தையும் அனுப்பி வைக்கிறாயா...

கஞ்சத்தனம
கஞ்சத்தனத்தின் உயரம் 5 அடி 3 அங்குலமா நண்பா?
உன் உயரம் அதுதான் என்று நினைக்கிறேன்...

நட்புக்கு சாவில்ல
நண்பர்கள் இருவர் சாகத் துணிந்தனர்...
மலை முகட்டுக்கு சென்று இருவரும் பள்ளத்தில் குதித்தனர்...
கண்ணை மூடி குதித்த ஒரு நண்பன் கூறினான் நட்புக்கு கண்ணில்லை என்று...
இன்னொரு நண்பன் பாராசூட்டை திறந்து நட்புக்கு சாவில்லை என்றான்...

பெரிய ஆளா
என் பையன் பெரிய ஆளாக என்ன செய்யறதுன்னே தெரியல?

இது என்ன பெரிய வருஷம் 20 வருஷம் ஆன உடனே அவன் தானா பெரிய ஆளிய்டப்போறான்...

நான் ஒண்ணுமே செய்ய
ஏண்டா உன்ன வேலையிலிருந்து துரத்திட்டாஙளாமே? அப்படி என்னத்தான் செஞ்ச?

நான் ஒண்ணுமே செய்யலடா...

ஓஹோ அதான் வேலைய விட்டு துரத்திடாங்களா...

இலையுதிர்க் காலம்
என்னடா மச்சான் இலையை உடம்பு பூரா சுத்திகிட்டு இருக்கற அந்த பெண்ணோட ஓவியத்தை இவ்வளவு நாளா வந்து பாத்திகிட்டுருக்க... உனக்குள்ள இவ்வளவு ஒரு கலா ரசனையா?

இலையுதிர்க் காலம் வர்றபோது அந்த இலையெல்லாம் உதிர்ந்து போயிடுமில்ல..

ஏர் கண்டிஷன
ஆபீஸ்ல எல்லாரும் உற்சாகமா வேலை செய்ய எதோ கண்டிஷன் போடணும்னு சொன்னீங்களாமே அது என்ன?

ஏர் கண்டிஷன் தான்

லெட்டர் போட்டிருந்தா...
ஏண்டா ஒரு லெட்டர் போட்டிருந்தா போறுமே பணம் அனுப்பியிருப்பேனே?

அவ்வளவு பணம் இருந்தா நான் ஏன் உன் கிட்ட பணம் கேட்டு நேர்ல வந்து நிக்கப்போறேன்...

வெப்துனியாவைப் படிக்கவும்