"ஜோக்"கவிதை : நண்பனுக்கு கடிதம்

Webdunia

சனி, 4 ஆகஸ்ட் 2007 (16:39 IST)
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு "அன்பாக" எழுதிய கடிதம்

பணம் என்ன செய்யும் என் நண்பா?
பொருளை வாங்கும் ஆனால் அது பொருளைத் தருமா?

வீட்டை வாங்கும்; காட்டை வாங்குமா?
மெத்தையை வாங்கும் தூக்கத்தை வாங்குமா?

கடிகாரத்தை வாங்கும் நேரத்தை வாங்குமா?
புத்தகத்தை வாங்கும் அறிவை வாங்குமா?

பதவியை வாங்கும் மரியாதையை வாங்குமா?
மருந்தை வாங்கும் ஆரோக்கியத்தை வாங்குமா?

ரத்தம் கூட விலைக்கு வாங்கலாம், வாழ்க்கையை வாங்க முடியுமா? என் நண்பா?

எனவே நான் கூறுவதைக் கேள்: பணத்தால் வலியும், உளைச்சலும்தான் ஏற்படும். உன் நண்பனான என்னால் நீ பணத்தால் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் உன்னை துன்பப் படுத்தப்போகும் பணத்தை என்னிடம் கொடுத்துவிடு... உன் துன்பத்தை நான் சுமக்கிறேன்... இதைவிட நட்புக்கு ஏதேனும் இலக்கணம் இருக்கிறதா? நீயே கூறு என் நண்பா.

"ஜோக்"கவிதை : அறிவுரை

நண்பா உனக்கு அறிவுரை வேண்டுமா
எனக்கு மெசேஜ் அனுப்பு

உனக்கு என் நட்பு வேண்டுமா
என்னை அழை...

உனக்கு பணம் வேண்டுமா.....
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண்
சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது...

வெப்துனியாவைப் படிக்கவும்