அதிரடியாக விலை குறைந்த சியோமி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:11 IST)
சியோமியின் போகோ ப்ராண்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை மீண்டும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது அடிப்படை மற்றும் மிட்ரேன்ஜ் வேரியண்ட் போகோ எஃப்1 ரூ.2000 விலை குறைப்பையும், ஹைஎண்ட் வேரியண்ட் போகோ எஃப்1 ரூ.5000 விலை குறைப்பையும் பெற்றுள்ளது.