iPhone-ல் புதிய அப்டேட்: வாட்ஸ் ஆப் தரும் சர்ப்ரைஸ் என்ன?

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:35 IST)
ஐபோனில் 8 பேர் வீடியொ கால் மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா காரணமாக வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்டஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது.   
 
இதனைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது வரை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் குரூப் வீடியோ / குரல் அழைப்பில் இனி, நான்கு நபர்களில் இருந்து, எட்டு நபர்களுடன் உரையாடலாம். பீட்டா பதிப்பை வைத்திருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களூம் இந்த அம்சத்தை பெறுவார்கள்.  
 
இந்த அப்டேட், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ் ஆப் v2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ் ஆப் v2.20.50.25 பீட்டாவில் பயனர்களுக்கு வெளிவருகிறது. தற்போது ஐபோன்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்து இந்த அம்சத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்