வோடஃபோன் கட்டண உயர்வு அமலாகியுள்ள நிலையில் குறுகியகால சாஷெட் ரீசார்ஜ் மற்றும் வவுச்சர் விலைப்பட்டியல் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி 40% கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி. புதிய ரீசார்ஜ் விலைப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குறுகியகால சாஷெட்:
ரூ. 19 திட்டத்தில் வோடபோன் ஐடியாவில் இருந்து வோடபோன் ஐடியா எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 150 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
காம்போ வவுச்சர்:
1. ரூ. 49 சலுகையில் ரூ. 38 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
2. ரூ. 79 சலுகையில் ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா மற்றும் அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
3. ரூ. 97 சலுகையில் ரூ. 45 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் கால்ஸ்:
1. ரூ. 197 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
2. ரூ. 297 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
3. ரூ. 647 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.