வோடாபோனும் ஐடியாவும் கூட்டு: ஜியோவுக்கு இனி ஆப்பு

திங்கள், 30 ஜனவரி 2017 (16:04 IST)
ஜியோவின் இலவச சேவையை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வோடாபோன் நிறுவனம் ஐடியாவை தங்களது நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பெச்சுவர்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.


 

 
ஜியோ 4ஜி இலவச சேவை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்திக்க தொடங்கினர். ஜியோ இலவச சேவை டிசம்பர் முடிவடையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் மார்ச் மாதம் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஜியோவின் இந்த இலவச சேவை ஜூன் மாதம் வரை தொடரும் செய்திகள் பரவி வருகிறது.
 
இதனிடையே மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வேடாபோன் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள அதிரடி சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. போட்டி நிலவக்கூடிய சந்தையில் இடம்பெறுவதற்கான எல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது வோடாபோன் நிறுவனம் ஐடியாவை தங்களது இணைக்க சேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. தற்போது வோடாபோன் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்