டிசிஎஸ்சின் மூன்றாவது காலாண்டு லாபம் ரூ.6,083 கோடி

புதன், 13 ஜனவரி 2016 (11:00 IST)
மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.6,083 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


 

 
கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு லாபத்தின் அளவில் ஈட்டப்பட்ட லாபத்தைவிட 14.2 சதவீதம் அதிகமாகும்.
 
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். சந்திரசேகரன் கூறுகையில், "பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மூன்றாவது காலாண்டு சவாலானதாக இருக்கும். 
 
ஆயினும், சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்புகளையும் தாண்டி நிறுவனத்தின் நிகர லாபம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
 
நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில், வட அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பான அளவில் உள்ளது". என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்