உங்களது பான் கார்ட் ஆக்டிவாக உள்ளதா? 11 லட்ச பான் கார்ட்டை ரத்து செய்த மத்திய அரசு!!

புதன், 9 ஆகஸ்ட் 2017 (13:48 IST)
மத்திய அரசு இதுவரை 11 லட்ச பேரின் பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. சரியான தகவல் அளிக்காமல் இருக்கும் பான் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. 


 
 
இதனால் பலரின் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால் பான் கார்ட்டை மீட்டு எடுக்க வேண்டியது அவசியமானது.  
 
பான் கார்ட் ஆக்டிவாக இருப்பதை கண்டறிவது எப்படி?
 
வருமான வரித்துறை இணையத்திற்கு சென்று, சர்வீஸ் என்ற டேப்பை கிளிக் செய்து 'நோ யுவர் பான்' என்பதை செலக்ட்ட் செய்யவும்.
 
இங்கிருந்து புதிய இணையபக்கத்திற்கு சென்றதும், கேட்கும் தகவல்களை பதிவு செய்து சப்மிட் செய்யவும்.
 
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும், அதனை வேலிடேட் செய்யவும். அதன் பின்னர் உங்களது பான் கார்டு ஆக்டிவாக இருந்தால் தகவல்களின் கடைசியில் ஆக்டீவ் என்று இருக்கும்.
 
இதன் மூலம் உங்களது பான் கார்ட் ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்