வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி வழங்கிய எஸ்பிஐ

வியாழன், 13 ஜூலை 2017 (13:08 IST)
ரூ.1000 வரியிலான தொகையை ஐஎம்பிஎஸ்(IMPS) மூலம் பரிமாற்றம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.


 

 
அண்மையில் எஸ்பிஐ வங்கி கட்டண வசூலில் அதிக அளவிலான மாற்றங்களை கொண்டு வந்தது. பணப்பரிவர்த்தனை செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தொகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.1000 தொகை வரையிலான பணப்பரிவர்த்தனை செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
 
விரைவாக இணையதளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறையான ஐம்பிஎஸ்(IMPS) மூலம் செய்யும் பணப்பரிவர்த்தனைக்கு மட்டும் இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வங்கி, சிறிய அளவிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவே இந்த அறிவிப்பு என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
 
இதனால் இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி 1000 ரூபாய் வரை கூடுதல் கடட்ணம் இல்லாமல் பண பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்