விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:24 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.1000 விலையை குறைத்துள்ளது. தற்காலிக விலை குறைப்பான இது அமேசான்.இன் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும்.