ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ரிலையன்ஸ்!!

வியாழன், 19 ஜனவரி 2017 (14:42 IST)
ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும் தக்க வைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்தது. 


 
 
இதன் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் முடிவடைவதால், ஜூன் 30 ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது.
 
அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற ஜியோ அறிமுகத்தின் போது, டேட்டா முதல் வாயஸ் கால் வரை அனைத்தையும் இலவசம் என அறிவித்தது. இது டிசம்பர் 31 வரை நீடித்தது. 
 
அதன் பின்னர் ஹேப்பி நியூ இயர் என்ற பெயரில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவை மட்டும் குறைத்து வாய்ஸ் முற்றிலும் இலவசம் என்ற ஆஃபரை வழங்கியது. இந்த ஆஃபர் வருகிற மார்ட் 31 ஆம் தேதி முடிய உள்ளது.
 
தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரையில் இலவச சேவை நீட்டிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. இதில் இண்டர்நெட் டேட்டா மட்டும் குறைவான விலையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்றும் ஜியோ வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.
 
ஜியோ நிறுவனத்தின் இப்புதிய திட்டம் குறித்த செய்தியை சில உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய திட்டத்தில் இண்டர்நெட் டேட்டாவிற்கு மட்டும் மாதம் 100 ரூபாய் வசூல் செய்யப்படலாம் எனவும் கூறியுள்ளனர். விரைவில் இதனை ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்